October 3, 2022

செப்.26ல் மஹிந்திரா ஸ்கார்பியோ என் வினியோகம் துவக்கம்

சென்னை, செப்.1

மஹிந்திரா நிறுவனம் ஜூன் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ என் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருந்தது.

புதிய ஸ்கார்பியோ என் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த மாடலுக்கான வினியோக விவரங்களை மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ ஹி மாடலின் வினியோகம் அடுத்த மாதம் 26 ஆம் தேதி துவங்ககிறது. முதற்கட்டமாக ஸ்கார்பியோ என் இசட்8எல் வேரியண்ட் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்கார்பியோ என் மற்ற வேரியண்ட் வினியோகம் அதன் பின் தொடங்கும். இந்த காரை முதலில் முன்பதிவு செய்த 25 ஆயிரம் பேருக்கு தற்போது வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த முன்பதிவுகளின் போது காரின் வினியோகம் நான்கு மாதங்களில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

முன்பதிவு நிறுத்தியது பற்றி மனம் திறந்த டொயோட்டா இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் 25 ஆயிரம் முன்பதிவுகளையும் வினியோகம் செய்து முடிக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. மேலும் வினியோகம் துவங்கிய பத்து நாட்களுக்குள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடல் இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஆறு மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் கிடைக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது.

Spread the love