October 4, 2022

செப்.25ந் தேதி அறிமுகமாகும்
விவோ போல்டபில் போன்

மும்பை, செப்.21

விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புது போல்டபில் போன் விவோ ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ எக்ஸ் போல்டு போல்டபில் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்சன் ஆகும்.

புது ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் போல்டு பிளஸ் 5ஜி என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் புதிய விவோ எக்ஸ் போல்டு பிளஸ் 5ஜி மாடல் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

செப்.26ந் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இத்துடன் புதிய விவோ எக்ஸ் போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் 50 எம்பி பிரைமரி கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி போர்டிரெயிட் மற்றும் 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா வழங்கப்பட இருக்கிறது. புதிய விவோ எக்ஸ் போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏயஹச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

Spread the love