October 3, 2022

செப்.14ல் ஹர்ஷா இன்ஜினியர்ஸ் ஐபிஓ வெளியீடு

புது தில்லி, செப்.10

அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்ட ஹர்ஷா இன்ஜினியர்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது, வரவிருக்கும் செப்டம்பர் 14 அன்று தொடங்கவுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பேரிங் கேஜ் நிறுவனமான இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.455 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படலாம். இதே ஏற்கனவே உள்ள பங்குதாரர்களாக உள்ள முதலீட்டாளர்கள் மூலம் ரூ.300 கோடி வரையில் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஓஎப்எஸ்-ன் பகுதியாக நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதார்கள் குழுக்கள், ராஜேந்திரா ஷா, ஹரிஷ் ரங்வாலா மற்றும் நிர்மலா ஷா உள்ளிட்டோர் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கு வெளியீட்டில் ஓஎப்எஸ் மூலம் தகுதியுள்ள ஊழியர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பங்கு வெளியீட்டினை இரண்டாவது முறையாக வெளியிட களமிறங்கியுள்ளது. கடந்த 2018-லியே டிராப்ட் பேப்பர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஐஎல் & எஃப் எஸ் நெருக்கடி காரணமாக அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இது என்பிஎப்சி துறையையும் உலுக்கி எடுத்தது. ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டில் 314 – 330 ரூபாயாக பங்கு விலையினை நிர்ணயம் செய்துள்ளது.

Spread the love