September 27, 2022

செப்.14ல் அறிமுகமாகும் ஐகூ இசட்6 லைட் 5ஜி

புது தில்லி, செப்.12

ஐகூ இசட்6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது: இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் எஸ்எம் 4375 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 6ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பன்டச் ஒஸ் 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 440 பிபிஐ பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 1,080×2,408 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பேட்டரி 127 மணிநேர மியூசிக் ப்ளே ஆதரவை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு கொண்ட 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே ஆதரவை பொறுத்தவரை 240 எர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் 120 எர்ட்ஸ் ரெஃப்ர´ங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

Spread the love