November 29, 2022

செப்டம்பர் காலாண்டில் நைகா 344 சதம் வளர்ச்சி

மும்பை, நவ.2

நாட்டின் முன்னனி பேசன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லரை விற்பனையாளரான நைகா நிறுவனம் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டினை காட்டிலும் இந்நிறுவனம் 344% நிகரலாபம் அதிகரித்து, 5.2 கோடி ரூபாயாக செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. மேலும், இதன் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 39% அதிகரித்து, 1230 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வரிக்கு முந்தைய லாபம் 542% அதிகரித்து, 8.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் ஒருங்கிணைந்த மொத்த விற்பனை கடந்த ஆண்டினை காட்டிலும் 45% அதிகரித்து, 2345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந் நிறுவனத்தின் செயல் திறன் குறித்து பேசிய நய்காவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பல்குனி நாயர், எங்கள் வணிகம் நல்ல வலுவான வளர்ச்சியினை காட்டியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டுமே வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது எங்களின் மார்ஜின் மேம்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு புதிய ஸ்டோர்கள் மற்றும் புதிய முதலீடுகளை செய்து வருகின்றோம். இது எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகின்றது. இது விற்பனையை அதிகரிக்கவும் உதவியது. அழகு, பர்சனல் கேர் மற்றும் ஆரோக்கியத்திற்கான நுகர்வோர் பொருட்கள் என பலவற்றின் தேவையானது அதிகரித்துள்ளது. இப்பிரிவில் நுகர்வும் அதிகரித்து வருகின்றது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நல்ல ஆரோக்கியமான அறிகுறி காணப்படுகின்றது. தொடர்ந்து சர்வதேச பிராண்டுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப முதலீடு செய்து வருவதாகவும் நாயர் தெரிவித்துள்ளார்.

Spread the love