December 9, 2022

செப்டம்பர் காலாண்டில் தனலக்ஷ்மி வங்கியின் நிகர வருவாய் ரூ 285 கோடியாக உயர்வு

சென்னை, நவ.14

தனலக்ஷ்மி வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.285.26 கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து தனலக்ஷ்மி வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.285.26 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.266.79 கோடியாக இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் ரூ.3.66 கோடியாக பதிவு செய்யப்பட்டிருந்த வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.15.89 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி 4.92 சதமாக இருந்த வாராக் கடன், இந்த ஆண்டின் அதே தேதியில் 2.32 சதமாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love