December 9, 2022

செப்டம்பர் காலாண்டில் ஐச­ர் மோட்டார் நிகர லாபம் 76 சதம் அதிகரிப்பு

சென்னை, நவ.18

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் நடைபெற்ற விறுவிறுப்பான விற்பனையின் உதவியால் ஐ­சர் மோட்டார் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் செப்டம்பர் காலாண்டில் 76 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து இந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2வது காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகரலாபம் ரூ.657 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 76 சதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருஙகிணைந்த நிகர லாபம் ரூ.373 கோடியாக இருந்தது.

மேலும், மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும் ரூ.2,250 கோடியிலிருந்து ரூ.3,519 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இரு சக்கர வாகனப் பிரிவான ராயல் என்ஃபீல்டு, செப்டம்பர் காலாண்டில் 2,03,451 மோட்டா சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்து விற்பனையைவிட 65 சதம் அதிகமாகும் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love