December 9, 2022

செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியா வருவாய் சரிவு

புது தில்லி, நவ.15

பாங்க் ஆப் இந்தியாவின் நிகர வருவாய், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேங்க ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர வருவாய் ரூ.960 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதம் சரிவாகும். மேலும், வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த நிதியாண்டின் இந்த காலகட்டத்தில் ரூ.9,523 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.11,497 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த முறை ரூ.733 கோடியாக இருந்த வரிச் செலவு இந்த முறை ரூ.502 கோடியாக குறைந்ததன் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கியின் மொத்த வாராக்கடன் 12 சதவீதத்திலிருந்து (ரூ.50,270 கோடி) 8.51 சதவீதமாக (ரூ.42,014 கோடி) குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love