December 8, 2022

செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ராணே ஹோல்டிங்ஸ் லாபம் 41 சதம் அதிகரிப்பு

சென்னை, அக்.29

வாகன உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரானே குழுமத்தின் ரானே ஹோல்டிங்ஸ் லிமிடெட், கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் தனது வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தில் 41.2 சதம் வளர்ச்சிகண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து ராணே ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.23.3 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 41.2 சதம் அதிகமாகும்.

அப்போது நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.16.5 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.697.3 கோடியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அது இந்த நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.883.8 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.43.9 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.37.3 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love