December 9, 2022

செப்டம்பருடன் முடிவடைந்த 2வது காலாண்டில் டாபர் இந்தியா நிறுவன வருவாய் சரிவு

புது தில்லி, அக்.27

எஃப்எம்சிஜி நிறுவனமான டாபர் இந்தியா நிறுவனம், செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.85 சதம் சரிந்து ரூ.490.86 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், டாபர் இந்தியா ரூ.505.31 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,817.58 கோடியாக இருந்த வருவாய், அதன் செயல்பாடுகளின் மூலம் 6 சதம் அதிகரித்து ரூ.2,986.49 கோடியாக உள்ளது. இதன்மூலம், டாபர் இந்தியா நிறுவனத்தினுடைய நடப்பு நிதியாண்டின் முதல் பாதி நிகர லாபமும் சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் பாதி லாபம் ரூ. 943.61 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதி நிகர லாபம் 1.23 சதவிகிதம் சரிந்து ரூ. 931.32 கோடியாக உள்ளது.

Spread the love