November 29, 2022

செப்டம்பரில் அதிக ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை
மாருதி பலேனோ முதலிடம் பிடித்தது

புது தில்லி, அக்.27

கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான பிரிமியம் ஹேட்ச்பேக் கார் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: 2021, செப்டம்பரில் 8,077 பலேனோ கார்கள் விற்பனையாகின. இது, 2022, செப்டம்பரில் 19,369 ஆக அதிகரிக்க, 140 சத வளர்ச்சியை எட்டியது.

புரொஜெக்டர் எல்இடி யஹட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் பி¼ள புரோ பிளஸ் டச் ஸ்கிரீன் உடன் 9 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்– அப்- டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், குரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டூயல் டோன் டேஷ்போர்டு, ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐடில் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம் சிறப்பம்சம். மேலும், இதன் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டூயல் ஜெட் கே12 என் பெட்ரோல் இன்ஜின் 90 பிஎச்பி பவரையும்,113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல்/5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

Spread the love