October 3, 2022

சென்ஸ்ஹாக்கை கையகப்படுத்தும் ரிலையன்ஸ்

புது தில்லி, செப்.6

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, சென்ஸ்ஹாக் நிறுவனத்தை கையகப்படுத்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த சென்ஸ்ஹாக் நிறுவனம், சூரிய ஒளி மின்சக்திக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தை, ரிலையன்ஸ், கிட்டத்தட்ட ரூ.256 கோடியில் கையகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், சென்ஸ்ஹாக் நிறுவனத்தின் 79.4 சத பங்குகளை வாங்குவதன் வாயிலாக, ரிலையன்ஸ் நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் தன்னுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது. சென்ஸ்ஹாக் நிறுவனம், 2018ல் துவக்கப்பட்டது. சூரிய மின்சக்தி துறைக்கு தேவைப்படும் மென்பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. 15 நாடுகளில், 140 நிறுவனங்களை, வாடிக்கையாளர்களாக கொண்டு உள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள், நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுப்பெறும் என, ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Spread the love