December 9, 2022

சென்னை விமான நிலையத்தில்
ரூ.89.97 மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை, நவ.15

அபுதாபியில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் 3எல்-141 என்ற விமானத்தின் மூலம் 11.11.2022 அன்று சென்னை வந்த இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரிடம் ரகசிய தகவலின் அடிப்படையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் சோதனை மேற்கொண்ட போது, பசை வடிவில் 3 தங்க பொட்டலங்கள் அவரது உடலின் குடல் பகுதியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 724 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் அபுதாபியில் இருந்து எத்திஹாட் ஏர்லைன்ஸ் இஒய்-268 விமானத்தில் இருந்து 12.11.2022 அன்று சென்னை வந்த இந்திய ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவரது உடமைகளிலிருந்து 1298 கிராம் எடை கொண்ட 4 தங்க பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பயணிகளிடமிருந்து மொத்தம் 2022 கிராம் எடை கொண்ட 89 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சுங்கச்சட்டம்1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ளார்.

Spread the love