October 2, 2022

சென்னை விமான நிலையத்தில் 800 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை, செப்.16

துபாயில் இருந்து 13-ந் தேதி விமானம் மூலம் சென்னை வந்த முருகன் கோவிந்தராஜூ என்ற பயணியை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், 3 தங்க பிஸ்கெட்டுகள், ஒரு தங்க பெல்ட் பட்டை ஆகியவற்றை தனது பேண்ட்டில் மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 580 கிராம் எடைகொண்ட இதன் மதிப்பு ரூ.25.99 லட்சமாகும்.

மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து அதே நாளில் வந்த விமானத்தில் சோதனையிட்டதில், முன்பக்கம் இருந்த கழிப்பறையில் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 220 கிராம் எடைகொண்ட அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.9.85 லட்சமாகும். இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love