October 3, 2022

சென்னை மெட்ரோ ரயில்களில்
ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம்

சென்னை, செப்.14

சென்னை மெட்ரோ ரயில்களில், ஒரே நாளில் மட்டும் 2.30 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 31.01.2022 அன்று 1,35,977 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 28.02.2022 அன்று 1,43,252 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28.03.2022 அன்று 2,10,634 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 25.04.2022 அன்று 1,74,475 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அதேபோல், கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக 26.05.2022 அன்று 1,91,720 பயணிகளும், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகளும், ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 29.08.2022 அன்று 2,20,89 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்கள் அன்று(செப்.12) ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,30,611 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 21,419 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 11,189 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 10,599 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10,289 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். மேலும், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love