October 4, 2022

சென்னை-திருப்பதி இடையே
அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

சென்னை, செப்.20

சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலையே பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை-திருப்பதி இடையே கொரோனாவுக்கு முன்பு வரை மின்சார ரயில் சேவை இருந்து வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சென்னை-திருப்பதி ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் (06727) நீட்டிப்பு செய்யப்பட்டு சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயிலாக கடந்த 13-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிவேக ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. சென்னை-திருப்பதி அதிவேக ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடை பெற்றது. இந்த ரயில் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக ரேணிகுண்டாவுக்கு 145 கி.மீ. வேகத்தில் செல்ல சோதனை ஓட்டம் நடை பெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயில் மணிக்கு 142 கி.மீ வேகத்தில் சென்றது.

Spread the love