December 7, 2022

சென்னை உள்வட்டச்சாலைகளில் மழைநீர் வடிகால்வாய்
அமைக்கும் பணிகள: அமைச்சர் ஆய்வு

சென்னை, நவ.10

சென்னை, கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கோயம்பேடு வழியாக மணலி செல்லும் உள்வட்டச்சாலையில், ஈக்காட்டுத்தாங்கல் முதல் அடையாறு வரை, மழைநீர் வடியும் பொருட்டு, 530 மீட்டர் நீளத்திற்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகள், கே.கே.நகர் மற்றும் அசோக் நகர் பகுதியில், அண்ணா பிராதானச் சாலை சந்திப்பில் இருந்து அடையாறு ஆறு வரை, சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், விருகம்பாக்கம் வாய்க்காலில் உள்ள பாலத்தின் அடியில், தேங்கியிருக்கும் மண் மற்றும் கழிவுகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் நவீன இயந்திரங்களைக் கொண்டு அடைப்புகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடித்திட அலுவலர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், வடபழனி பகுதியில், பெரியார் பாதை சந்திப்பில், தேங்கும் மழைநீரால் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, நவீன முறையில் முன்வார்ப்பு செய்து கல்வெட்டு பொருத்தும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், வி.பிரபாகர்ராஜ், தலைமைப் பொறியாளர், ரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர், ப.செந்தில், கோட்டப் பொறியாளர், ரவி, நெடுஞ்சாலைத்துறைமற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love