சென்னை, ஜன.21
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’, சென்னையில் புதிதாக இரண்டு கிளைகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவற்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட வங்கியின் செயல் இயக்குனர் ஆUஷ் பாண்டே தெரிவித்துள்ளதாவது:
நடந்து முடிந்த நிதியாண்டில், பிற பொதுத்துறை வங்கிளை விட லாப வளர்ச்சியில் அதிகமாகவும், வாராக்கடன் விகிதத்தில் குறைவாகவும் பாங்க ஆப் மஹாராஷ்டிரா விளங்குகிறது. சென்னை மண்டலத்தின் கீழ், தமிழ்நாட்டில் 55 கிளைகளும், புதுச்சேரியில் 3 கிளைகளும் உள்ளன. தற்போது 57 வது கிளை சென்னை வேளச்சேரியிலும், 58 வது கிளை ‘ஹவுசிங் பைனான்ஸ்’ கிளையாகவும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சிக்கு, சென்னை மண்டலத்தின் மண்டல மேலாளர் நாகேந்திர கவுட் ஏற்பாடு செய்திருந்தார். புதிதாக திறக்கப்பட்ட கிளையில், வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் கடன் முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகனக் கடன் போன்றவற்றை பெற்று பயனடைந்தனர்.