December 9, 2022

சென்னையில் டேட்டா சென்டர் துவக்கம் அதானி என்டர்பிரைசஸ் – எட்ஜ்கனெக்ஷ் கூட்டு

புது தில்லி, நவ.5

கவுதம் அதானியின் தலைமையிலான அதானி’ குழுமம், டேட்டா சென்டர் ஒன்றை சென்னையில் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

அதானி குழுமத்தைச் சேர்ந்த, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், எட்ஜ்கனெக்ஷ் நிறுவனத்துடன் இணைந்து, அதானி கனெக்ஷ் எனும், கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எட்ஜ்கனெக்ஷ் நிறுவனம், உலகளவில் மிகப்பெரிய தனியார் தரவு மைய நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், இந்த கூட்டு நிறுவனம், சென்னை 1 எனும், ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் ஒன்றை சென்னையில் துவக்கி உள்ளது. இந்த தரவு மையம், நூறு சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இந்த தரவு மையம், உயர் தொழில்நுட்பத்துடன், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது, உலக அளவில், மிக வேகமாக வளரும் தரவு மையங்களுக்கான சந்தையாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவின் தரவு மையங்களின் திறன், தற்போது 600 மெகாவாட் ஆக உள்ளது. இது, 2024ல் 1,300 மெகாவாட் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Spread the love