October 3, 2022

சென்னையில் ஆடம்பர வீடுகளின் வாடகை 14 சதம் அதிகரிப்பு: அனராக் நிறுவனம் தகவல்

சென்னை, செப்.22

நாட்டில் உள்ள முக்கியமான 7 நகரங்களில், ஆடம்பர வீடுகளின் சராசரி மாத வாடகை, கடந்த 2 ஆண்டுகளில், 8 – 18 சதம் அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திக்ள வெளியாகியுள்ளது.

இது குறித்து அனராக் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் முக்கியமான நகரங்களில் உள்ள ஆடம்பர வீடுகளின் சராசரி மாத வாடகை, கடந்த 2 ஆண்டுகளில், 8 – 18 சதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால், வீடுகளின் மூலதன மதிப்பு 2 – 9 சதமே அதிகரித்துள்ளது. மும்பையில் உள்ள வோர்லி பகுதியில், வாடகை அதிகபட்சமாக 18 சதம் அதிகரித்துள்ளது.

இங்கு, கடந்த 2020ல், 2,000 சதுர அடி கொண்ட வீட்டின் வாடகை ரூ.2 லட்சம் ஆக இருந்தது, தற்போது ரூ.2.35 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை, அண்ணாநகரில் 13 சதம் அதிகரித்துள்ளது. இங்கு ரூ.56 ஆயிரம் ஆக இருந்த வீடுகளின் சராசரி மாத வாடகை, தற்போது ரூ.63 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. மேலும் மூலதன விலை, சதுர அடிக்கு ரூ.11,300 ரூபாயில் இருந்து, 5 சதம் அதிகரித்து, ரூ.11,850 ஆக உள்ளது. கோட்டூர்புரத்தில் சராசரி மாத வாடகை 14 சதம் உயர்ந்து உள்ளது.

மேலும், பெங்களூரு ராஜாஜி நகரில், சராசரி வாடகை 16 சதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அனராக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love