February 3, 2023

செகந்திரபாத்-விஜயவாடா இடையே வந்தே பாரத்
புத்தாண்டில் இயக்க திட்டம்

அமராவதி, டிச.5

தென்னிந்தியாவின் இரண்டவாது வந்தே பாரத் ரயில் வரும் புத்தாண்டு முதல் செகந்திரபாத் -விஜயவாடா இடையே ஓட தயாரகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் சார்பில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது முதல் சேவை புதுடில்லி – வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு பிப்.,15-ல் துவங்கியது. இதையடுத்து, புதுடில்லி – ஜம்மு காஷ்மீர், மும்பை – காந்தி நகர், புதுடில்லி – ஹிமாச்சல பிரதேசத்தின் உனா என நான்குவழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஐந்தாவது வழித்தடமாக தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் சென்னை மற்றும் மைசூரு இடையே அண்மையில் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் செகந்திராபாத்- விஜயவாடா இடையே வரும் புத்தாண்டு முதல் ஓட தயாராக உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: தற்போது இயக்கப்பட உள்ள தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில், நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் புத்தாண்டு முதல் ஒடுவதற்கு தயாராக உள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இந்த ரயில் விசாகப்பட்டனம் வரையில் நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விஜயவாடா விசாகப்பட்டனம் இடையே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும். வரும் 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Spread the love