October 3, 2022

சுசூகி மேட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு

மும்பை, செப்.6

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத மொத்த விற்பனையில் 8.3 சதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 79,559-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனையான 73,463-உடன் ஒப்பிடுகையில் இது 8.3 சதம் உயர்வாகும். கடந்த ஆகஸ்டில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 64,654-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 61,809-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் 11,654 மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதியான நிலையில், கடந்த மாதம் அந்த எண்ணிக்கை 14,905-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love