December 7, 2022

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதம் வரை குறைக்க திட்டம்: நிதின் கட்கரி தகவல்

புது தில்லி, நவ.19

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதிலாவது:

நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும், பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். அதே போல, சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Spread the love