December 9, 2022

சீன நிறுவனத்துக்கு தடை விதித்தது பிரிட்டன் அரசு

புது தில்லி, நவ.18

மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனத்தை, சீனாவுக்கு சொந்தமான நிறுவனம் கையகப்படுத்தியதற்கு பிரிட்டன் அரசு தடைவிதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நியுபோர்ட் வேபர் பேப் எனும் நிறுவனம், பிரிட்டனின் மிகப் பெரிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் 100 சத பங்குகளை வாங்கி இருப்பதாக, சீனாவின் விங்டெக் நிறுவனத்துக்கு சொந்தமான, நெதர்லாந்தில் உள்ள நெக்ஸ்பீரியா கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நெக்ஸ்பீரியா, நியுபோர்ட் வேபர் பேப் நிறுவனத்தின் 86 ச பங்குகளை உடனடியாக விற்றுவிட வேண்டும் என, பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. சீன நிறுவனத்தின் கையகப்படுத்துதல் நடவடிக்கை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதை தடுக்கும் வகையில், பங்குகளை விற்றுவிடுமாறு, பிரிட்டன் ஆணையிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரிட்டன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக நெக்ஸ்பீரியா தெரிவித்துள்ளது. இது, நிறுவனத்தை முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கையாகும் என்றும், இது குறித்து, சட்டரீதியாக முறையீடு செய்ய இருப்பதாகவும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் கைகளுக்குள் பிரிட்டனின் பொருளாதாரப் பிடி சென்றுவிடக்கூடாது என்ற காரணத்தால், இத்தகைய நடவடிக்கையை பிரிட்டன் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love