September 27, 2022

சீன கடன் செயலிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: பேடிஎம் விளக்கம்

புது தில்லி, செப்.5

சீனாவைச் சேர்ந்த கடன் செயலிக்கும் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது குறித்த விசாரணையில் அமலாக்கத் துறை எதுவும் கைப்பற்றவில்லை என பேடிஎம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த சில நிதி நிறுவனங்கள் மொபைல் போன் ஆப் வாயிலாக கடன் வழங்கிவருகின்றன. அவ்வாறு கடன் வாங்குவோரிடம் இருந்து அதிக வட்டி வசூலிப்பது போன்ற மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு கட்டமாக மொபைல் போன் வாயிலாக பண பரிவர்த்தனை செய்யும் ரேஸர்பே பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது 17 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து பேடிஎம் நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது: சீன லோன் ஆப்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் வாடிக்கையாளர்கள் பட்டியலில் அந்த நிறுவனங்கள் இல்லை. அமலாக்கத் துறை முடக்கியுள்ள பணம் எங்கள் நிறுவனத்துடன் தொடர்புடையதல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love