புது தில்லி, ஜன.4
சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இது குறித்து விரிவான செய்தியாவது: சீனாவில் தற்போது உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால்,
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவிலிருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சீன பயணிகள் அனைவருக்கும்ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவும், சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன்அறிவித்துள்ளது.