October 1, 2022

சிவகரந்தை

சிவகரந்தை மாற்றடுக்கில் அமைந்து நீண்ட மணமுள்ள இலைகளையும் சிவந்த பந்து போன்ற உருண்டையான மலர்களையும் உடைய, சிறு செடி. இதன் மருத்துவ பயன்கள் பொறுத்தமட்டில், இஸ்யூ அகற்றல், மனம் உடல் திசுக்களை இருக்கச் செய்தல், சிறுநீர் பெருக்கல், மாதவிலக்குத் தூண்டல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது. விழுவதற்கு முன் இலைகளை பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து கொள்ளவேண்டும். ஒரு கிராம் பொடியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர குருதி தூய்மையடையும் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும். சளி அகலும், தாதுபலம் பெறும். நீண்ட காலம் பயன்படுத்த முக வசீகரம் உண்டாகும். ரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்களை போக்கும். கபத்தை கரைக்கும். 40 நாட்கள் உண்டால் மேனி அழகு கூடும். சிவகரந்தை மிகுந்த மருத்துவ குணம் உள்ள அரிய வகை மூலிகை செடி. நல்ல வாசனை உடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இதன் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. இதன் வேர் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். சிவகரந்தை மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்த கூடியது.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love