November 29, 2022

சிறப்பு சுருக்கத்திருத்த 2022ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

மதுரை, நவ.9

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கத்திருத்த 2022-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வெளியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 09.11.2022-ஆம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2022-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்து 96 ஆயிரத்து 075 நபர்களும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 38 ஆயிரத்து 950 நபர்களும் மற்றும் மூன்றாம் பாலின வாக்களர்களின் எண்ணிக்கை 213 ஆக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 இலட்சத்து 35 ஆயிரத்து 238 நபர்கள் உள்ளனர்.

அதிக வாக்காளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 24 ஆயிரத்து 022 கொண்ட தொகுதியாக 189 மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உள்ளது. குறைவான வாக்காளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 15 ஆயிரத்து 500 கொண்ட தொகுதியாக 190 சோழவந்தான் (தனி) சட்டமன்றத் தொகுதி உள்ளது.

Spread the love