November 28, 2022

சியோமி புக் ஏர் 13 மாடல் சந்தையில் அறிமுகம்

புது தில்லி, அக்.29

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சியோமி புக் ஏர் 13 மாடலில் 13.3 இன்ச் 2880மு1800 பிக்சல் இ4 ஒஎல்இடி டிஸ்ப்ளே, 60 ஹெட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டால்பி விசன், வேசா டிஸ்ப்¼ள எச்டிஆர்500 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 2-இன்-1 டிசைன் மற்றும் 360 டிகிரி ஹின்ஜ், டச் சப்போர்ட் உள்ளது.

இதனால் புதிய சியோமி புக் ஏர் 13 மாடலை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் 6-சீரிஸ் அலுமினியம் அலாய், சிஎன்சி கார்விங் வழிமுறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த எடை மற்றும் அளவு முறையே 1.2 கிலோ மற்றும் 12துது ஆகும். இந்த லேப்டாப்பில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, டூயல் யூனிட் மைக்ரோபோன்கள், பேக்லிட் கீபோர்டு, கிளாஸ் டச்பேட், பவர் பட்டனில் கைரேகை சென்சார், 8 எம்பி கேமரா, 12 ம் தலைமுறை இண்டெல் கோர் ஐ7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் எக்ஸ்இ ஜிபுயு, அதிகபட்சம் 16 ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இதில் 58.3 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் விண்டோஸ் 11 ஒஎஸ், வைபை 6சி, ப்ளூடூத் 5.2, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் சியோமி புக் ஏர் 13 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 56,925 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Spread the love