February 3, 2023

சியோமி நிறுவனத்தில் 900 பேர் பணிநீக்கம்

புது தில்லி, டிச.21

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட், டுவிட்டர், கூகுள், மெட்டா’ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் நிலையில், அந்த வரிசையில், தற்போது சீன நிறுவனமான சியோமியும் சேர்ந்துள்ளது.

சியோமி நிறுவனத்தில் 900 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, 900 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 314. இதில் 32 ஆயிரம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். செப்டம்பர் காலாண்டில், இந்நிறுவனம் 9.7 சதவீத வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் விற்பனையும் 20 சதவீதம் சரிந்துள்ளது. சீனாவின் கொரோனா சம்பந்தமான தடைகளால், சந்தையில் தேவைகளும் குறைந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம் தற்போது ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Spread the love