September 27, 2022

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது போன்பே

புது தில்லி, செப்.21

சிங்கப்பூரில் தலைமை இடத்தை கொண்டிருக்கும் போன்பே இனி தனது தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது.

வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான போன்பே இதுவரை அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் வைத்து நிர்வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போன்பே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது: சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு எங்கள் தலைமையகத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்¼ளாம் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவுக்கு எங்கள் தலைமையகம் மாறும் என்றும் உறுதி செய்தார். ஆனால் அதே நேரத்தில் போன்பே நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சிங்கப்பூரிலேயே தலைமையகத்தை கொண்டிருக்கும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தலைமையகத்தை மாற்றுவதற்கான காரணத்தை போன்பே நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும் போன்பே நிறுவனத்தின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது. தற்போது இந்தியாவில் போன்பே நிறுவனத்திற்கு 250 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு மாதமும் ரூ.100 மில்லியனுக்கும் அதிகமாக இதன் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Spread the love