February 2, 2023

சிக்கன் பிக் பேக் பர்கர்
மெக்டொனால் அறிமுகம் செய்தது

சென்னை, ஜன.20

மெக்டொனால்ஸ் இந்தியா நிறுவனம் அதன் அடையாளச் சின்னமான சிக்கன் பிக் மேக் என்ற பெயர் கொண்ட பர்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக்குடன் இந்நிறுவனம் கைகோத்துள்ளது.

இதுகுறித்து மெக்டொனால்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிக்கன் பிக் மேக் என்ற பெயரில் பெரிய அளவிலான பர்கரை மெக்டொனல்ஸ் நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இது 3 டயர் பன்கள், 2 அடுக்குகளில் கிரிஸ்பி கோல்டன் பட்டீஸ், மொறுமொறுப்பான நறுக்கப்பட்ட லெட்டியூஸ், உருகும் சீஸ், சர்வதேச அளவில் தருவிக்கப்பட்ட ரகசிய சாஸ் மற்றும் கெர்கின்ஸ் ஆகியவை அடங்கிய 11 லேயர்களைக் கொண்ட பர்கர் ஆகும். இது தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெக்டொனால்’ஸ் இந்தியா சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு பிரிவின் மூத்த இயக்குநர் ஆர்.பி.அரவிந்த் தெரிவித்துள்ளதாது: சிக்கன் பிக் மேக்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தகால சலுகையுடனான இன்னுமொரு புத்தாக்கமான உணவாகும். வீரேந்திர சேவாக்கின் அளப்பரிய, தைரியமிக்க மற்றும் விளையாட்டுத்தனமான ஆளுமை எங்கள் பிராண்டுக்கு மிகவும் பொருத்தமானதென நினைக்கிறோம் என்றார். மேலும், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளதாவது: எனக்கு மிகவும் பிடித்தமான பிராண்டான மெக்டொனால்’ஸ் இந்தியா-வுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு முழுமையான மகிழ்ச்சியை அளிக்கிறது. சிக்கன் பிக் மேக்-ன்வருகையைக் கண்டு நான் மகிழ்ச்சிஅடைகிறேன். மேலும் இது அனைத்து சிக்கன் பர்கர் பிரியர்களுக்கும் புதிய தனிவிருப்பமாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார்.

Spread the love