December 8, 2022

சாம்சங் நிறுவனத்தின் லாபம் 5 சதம் சரிவு

சென்னை, அக்.26

சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 2022ம் நிதியாண்டுக்கான வரிக்குப் பிந்தைய லாபம் 4.86 சதம் சரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து சாம்சங் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2022ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.3,844.40 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ரூ.4,040.80 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் அது 4.86 சதம் சரிந்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டில் 8.65 சதம் அதிகரித்து ரூ.82,451.60 கோடியாக உள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் அது ரூ.75,886.30 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love