September 27, 2022

சர்வதேச தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

வாசிங்டன், பிப்.8

சர்வதேச தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து 3வது முறை முதலிடம் பெற்றுள்ளதாக மார்னிங் கன்சல்ட் ஆய்வு தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த, ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற தகவல் ஆய்வு நிறுவனம், நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார்.

இந்நிறுவனம் ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்துகிறது.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார். இந்த ஆண்டுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில், பிரதமர் நரேந்திர மோடி 72 சத ஆதரவு பெற்று மூன்றாவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் 64 சத ஆதரவுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார்.

இத்தாலி பிரதமர் மரியோ திராகி 57 சத வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் 41 சத வாக்குகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டனர். மேலும், இந்த பட்டியலில் 26 சத ஆதரவுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Spread the love