December 9, 2022

சர்வதேச சந்தையில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹோண்டா டபிள்யுவி-ஆர்

புது தில்லி, நவ.4

ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி முற்றிலும் புதிய டபிள்யுஆர்-வி மாடலை இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்தது.

இந்தோனேசியாவில் இருந்தபடி புதிய ஹோண்டா டபிள்யுஆர்-வி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், புதிய ஹோண்டா எஸ்யுவி அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏடிஏஎஸ் உள்பட ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டைலிங் மற்றும் டிசைனை பொருத்தவரை இந்த மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் கார் போன்று காட்சியளிக்கிறது.

இதன் முன்புறம் க்ரோம்-ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், எல்இடி யஹட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்-கள், முன்புறம் பம்ப்பர் மாற்றப்பட்டு ரி-டிசைன் செய்யப்பட்ட ஃபாக் லேம்ப் ஹவுசிங், பிளாக் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. புதிய மாடல் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் கொண்டுள்ளது.

இந்த மாடலின் கேபின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் அமேஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் உள்புறம் ஆல்-பிளாக் தீம், ஸ்டீரிங் வீல், டேஷ்போர்டு, டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 7 இன்ச் தொடு திரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Spread the love