October 3, 2022

சமூக நீதி நாள் உறுதிமொழி
ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்

நாமக்கல், செப்.17

தமிழக முதல்வர் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கடைபிடித்து, தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும் என்று அறிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்,எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் ! சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் ! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் ! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.சிவசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெ.தேவிகாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) நந்தகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love