September 27, 2022

சந்தையில் விற்பனைக்கு வருகிறது
லாவா ப்ரோபட்ஸ் என் 11 நெக்பேண்ட் இயர்போன்

சென்னை, செப்.12

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபட்ஸ் என் 11 நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் யஹட்செட் அந்நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த ஹி3 மாடலை தொடர்ந்து அறிமுகமாகி உள்ளது. இந்த இயர்போன் டூயல் ஹால்ஸ்விட்ச் – டேஷ் ஸ்விட்ச், டர்போ லேடன்சி மற்றும் ப்ரோ கேம் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள ப்ரோ கேம் மோட் 60 மில்லி செகண்ட் வரையிலான லேடன்சி மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேசன் வசதி வழங்குகிறது. இத்துடன் 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5.2, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, ஐபிஎக்ஸ் 6 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேசன் வசதி உள்ளது.

இதை கொண்டு அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும் அழைப்புகளில் எவ்வித தொந்தரவும் இன்றி மேற்கொள்ள முடியும்.

இந்த ஹெட்செட் 280 எம்ஏயஹச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கான பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 42 மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கிறது. புதிய லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் ஃபயர்ஃபிளை கிரீன், கை ஆரஞ்சு மற்றும் பேந்தர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை லாவா ப்ரோபட்ஸ் என்11 மாடல் ரூ. 999 விலையில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின் இந்த இயர்போன் ரூ. 1,499 விலையில் லாவா இ ஸ்டோர், அமேசான் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது

Spread the love