புது தில்லி, நவ.22
எஸ்யுவி பிரிவில் தங்களது சந்தைப் பங்கு கணிசமாக அதிகரிக்கும் என்று மாருதி சுஸூகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் சந்தையிடல் மற்றும் விற்பனைப் பிரிவு முதுநிலை செயலதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளதாவது:
எஸ்யுவி வாகனப் பிரிவில் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிரெஸா, கிராண்ட் விடாரா ஆகிய கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
எனவே, இந்த நிதியாண்டுக்குள் அந்த பிரிவில் எங்களது சந்தைப் பங்கு கணிசமாக அதிகரிக்கும் என்றார். மேலும், கடந்த ஜூலை மாதத்தில் எஸ்யுவி பிரிவில் எங்களது சந்தைப் பங்கு வெறும் 7.1 சதமாக இருந்தது. அது, ஆகஸ்ட் மாதத்தில் 10.8 சதமாகவும், செம்படம்பரில் 13.01 சதமாகவும் அதிகரித்தது. அக்டோபரில் எங்களது எஸ்யுவி சந்தைப் பங்கு இன்னும் அதிகரித்து 14.4 சதமாகியிருக்கிறது. மேலும், இந்தப் போக்கை அடிப்படையாகக் கொண்டே, எஸ்யுவி பிரிவில் எங்களது சந்தைப் பங்கு கணிசமாக உயரும் என்று நம்புகிறோம். கடந்த மாதத்தில் எங்களது பிரெஸா கார்களை உரிய எண் ணிக்கையில் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பவதில் சிக்கல் ஏற்பட்டது. அது தவிர்க்கப்பட்டிருந்தால் எங்களது எஸ்யுவி விற்பனை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றார் அவர்.