October 3, 2022

கோவிட் காலத்தில் வந்தே பாரத் திட்டத்தின்கீழ்
70 லட்சம் இந்தியர்கள் மீட்பு: ஜெய்சங்கர்

ரியாத், செப்.12

கோவிட் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 70 லட்சம் இந்தியர்களை மீட்டு வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும், தெரிவித்துள்ளதாவது:

சவுதி அரேபியா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரியாத் நகரில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடியாடினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உலகம் முழுவதிலும் இருந்து 70 லட்சம் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். இது போன்று யாரும் செய்தது கிடையாது. கோவிட் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய மீட்பு பணி இதுவாகும். இதனால் தான் இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love