October 4, 2022

கோலா அல்லது குளிர்பான துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் களமிறங்க திட்டம்

மும்பை, செப்.1

ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக எப்எம்சிஜி பிரிவில் வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளதைத் தனது வருடாந்திர கூட்டத்தில் அறிவித்தது. ஏற்கனவே இப்பிரிவில் பல பொருட்களைச் சொந்த பிராண்டில் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது கோலா அல்லது குளிர்பான துறையிலும் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 1970களில் மற்றும் 1980களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி கோலா பிராண்டாக இருந்த கம்பா கோலா அமெரிக்க நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தாலும், வர்த்தகத் தந்திரத்தாலும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் கம்பா கோலா பிராண்டை மொத்தமாக முகேஷ் அம்பானி தனது ரிலையனஸ் ரீடைல் எப்எம்சிஜி குடையின் கீழ் கம்பா கோலா வர்த்தகத்தை இணைத்து இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதற்காக கம்பா கோலா பிராண்டை 22 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.

இந்த பிராண்ட் மீண்டும் இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் தனது ரீடைல் கடைகள், ஜியோ மார்ட், 15 லட்சம் கூட்டணி கடைகள் வாயிலாகத் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love