October 3, 2022

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு துணை ஆணையாளர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மதுரை, பிப்.9

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி துணை ஆணையாளர் ச.சங்கீதா தலைமையில் அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும் வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும் கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் கொத்தடிமைத் தொழிலாளர்முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும் எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகைசெய்துள்ள அடிப்படை உரிமைகளைஅனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமைத் தொழிலாளர்முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமாக உறுதி கூறுகிறேன் என்று துணை ஆணையாளர் அவர்கள் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love