October 3, 2022

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின
உறுதிமொழியை ஆட்சியர் தலைமையில் ஏற்பு

நாமக்கல், பிப்.9

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையயாட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியான இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால்இ கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறு வாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டத்தை சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன் என்று அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

Spread the love