February 3, 2023

கொடிநாள் நிதிக்கு தராளமாக நிதி வழங்கிட வேண்டும்
மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல், டிச.5

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை கடும்பனிப்பொழிவிலும், மிக அதிகமான குளிரிலும் பாலைவனப்பகுதியில் காணும் கடும் வெப்பத்திலும் தனது சுயநலத்தைப்பாராதும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளில் இரவுபகல்பாராதும் நாட்டினைக்காத்து வரும் முப்படைவீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் படைவீரர் கொடிநாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

கொடிநாள் அன்று வசூலிக்கப்படும் தொகை போரில் உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களின் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் போரின்போது உடல் ஊனமுற்ற படைவீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படைவீரர்களின் நலன்களை பேணிக்காக்கவும் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

எனவே தியாக சுடர்களாக விளங்கும் முப்படைவீரர்களின் நலன்காக்க, படைவீரர் கொடிநாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு தராளமாக நிதி வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவத்துள்ளார்.

Spread the love