December 9, 2022

கேட்ஸ் அறக்கட்டளையுடன் மஹிந்திரா குழுமம் கூட்டு

புது தில்லி, நவ.9

மஹிந்திரா குழுமம், இந்தியாவில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன், மகிந்திரா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கானது. பின்தங்கிய பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும், இவ்வமைப்புகள் அதிக கவனம் செலுத்தும்.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்வது, திட்டங்களைச் செயல்படுத்துவது, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதை மேம்படுத்துவது ஆகியவற்றில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love