December 8, 2022

கேடிஎம் ஆர்சி 8சி லிமிடெட் எடிசன் சந்தையில் அறிமுகம்

சென்னை, அக்.28

கேடிஎம் நிறுவனம் 2023 ஆர்சி 8சி லிமிடெட் எடிசன் டிராக்-ஒன்லி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.

சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் லிமிடெட் எடிசன் மாடல் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 கேடிஎம் ஆர்சி 8சி மாடல் முற்றிலும் புதிய வண்ணம், ஏரோ பேக்கேஜில் மாற்றம், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், உயர் ரக உபகரணங்களை கொண்டிருக்கிறது.

மேலும், இதன் செயல்திறனை பொருத்தவரை 2023 கேடிஎம் ஆர்சி 8சி மாடல் 133 யஹச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாட்கள், குறைந்த எடை கொண்ட டைட்டானியம் வால்வுகள், காண்ராட், இரு பிஸ்டன் ரிங், அதிக கம்ப்ரெசன் ரேட், பெரிய திராட்டில் பாடி, போல்ஸ்டர் செய்யப்பட்ட பியூவல் பம்ப் / பிரெசர் காரணமாக இந்த மாடலின் திறன் 6.9 ஹெச்பி வரை அதிகரித்து இருக்கிறது.

மேலும், இந்த மோட்டார்சைக்கிளின் கிளட்ச் பிரீலோடு அதிகரிக்கப்பட்டு, டாப் பேலன்சர் நீக்கப்பட்டு, கிரான்க்-கேஸ் பேலன்சர் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கேடிஎம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் தெர்மல் ஸ்டேபிலிட்டியை உறுதிப்படுத்த பேங்க் ஆயில் கூலர் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் ஆர்சி 8சி மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும். இதில் உள்ள முற்றிலும் புது டைட்டானியம் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் எடை குறைய உதவுகிறது. புதிய லிமிடெட் எடிசன் மாடலின் டிராக்‌சன் கண்ட்ரோல், மேப்பிங் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை ரைடர்கள் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராட்டில் ரெஸ்பான்ஸ், பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர், ஆர்சிஎஸ் 19 கோர்சா கோர்சா மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவைகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காக்பிட் பகுதியில் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ் டேட்டா லாகர், கேடிஎம் ஆர்சி16 சார்ந்து உருவாக்கப்பட்ட ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உள்ளன. 2023 கேடிஎம் ஆர்சி 8சி மாடல் மொத்தத்தில் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

Spread the love