September 27, 2022

கூகுள் திறனை 20 அதிகரிக்க வேண்டும் ஊழியர்களுக்கு சுந்தர்பிச்சை வலியுறுத்தல்

லாஸ் ஏஞ்சல்ஸ், செப்.8

அமெரிக்கப் பொருளாதாரம் ரெசி­னுக்குச் செல்லும் முன்பே பெரு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைப்பதில் பல்வேறு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதில் கூகுள் நிறுவனம் மட்டும் இதுவரையில் பணிநீக்கம் செய்யவிட்டாலும், கூகுள் அடுத்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லையயன்றால் கட்டாயம் நிறுவனத்தில் பணிநீக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என ஊழியர்களை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சுந்தர் பிச்சை சமீபத்தில் கலந்துகொண்ட கோடு கான்பிரான்ஸ் நிகழ்ச்சியில், நிறுவனத்தின் திறனை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும், அதேநேரத்தில் ஊழியர்கள் முழுமையாக பணியாற்றுகிறார்களாக என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் உபரியாக இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது என தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் முன்பை விடக் குறைவான ஊழியர்கள் இருக்கும்போது, அனைத்தும் முக்கியமான வி­யங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வேகமான பணியாற்ற ஊழியர்கள் துவங்குவார்கள். மேலும் உங்கள் பணியாளர்கள் உண்மையில் அவர்கள் பணிபுரியும் விசயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் கட்டாயம் பலன் கிடைக்கும். இதைத் தான் கூகுள் செய்ய விரும்புகிறது எனச் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

மேலம், ஊழியர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு வி­யத்திற்கு முடிவு எடுக்கத் தாமதமாகிறது. இதனால் ஊழியர்களின் உற்பத்தித் திறன், நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைக்கிறது. இதைச் சீர்படுத்த தேவையான இடத்தில் அளவான ஊழியர்களை வைப்பதன் மூலம் இதைச் சரி செய்ய முடியும் என்கிறார்.

Spread the love