September 27, 2022

குறைந்த விலை கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிக்கள் கோடக் நிறுவனம் அறிமுகம் செய்தது

சென்னை, செப்.15

கோடக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் மேட்ரிக்ஸ் கியூஎல்இடி எனும் பெயரில் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கின்றன.

பண்டிகை காலத்தை ஒட்டி நடைபெறும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ் கோடக் நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மேட் இன் இந்தியா கியூஎல்இடி டிவிக்கள் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விசன் சான்று பெற்றுள்ளன. இவை தரமான ஆடியோ மற்றும் பிக்சர் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கின்றன.

இத்துடன் மேம்பட்ட சவுண்ட் அனுபவம் கிடைக்க இவற்றில் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. கோடக் ஸ்மார்ட் டிவிக்களில் பெசல் லெஸ் டிசைன் மற்றும் 40 வாட் டால்பி அட்மோஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.

இந்த டிவியுடன் வரும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற சேவைகளுக்கு பிரத்யேக பட்டன்களை கொண்டிருக்கிறது. கூகுள் டிவி இண்டர்பேஸ் கொண்டிருப்பதால் இந்த டிவியில் கூகுள் சார்ந்த அம்சங்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. புதிய கோடக் 50 இன்ச் டிவி மாடல் விலை ரூ. 33,999 என்றும் 55 இன்ச் மாடல் விலை ரூ. 40,999 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 59,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Spread the love