October 3, 2022

குறைந்த விலையில் 5ஜி போன்கள் வாய்ப்பில்லை சியோமி நிறுவன இந்திய தலைவர் தகவல்

புது தில்லி, செப்.10

தற்போது ரூ.10,000க்குள் 5ஜி போன்களை வெளியிடுவது கடினம் என்று சியோமி இந்தியா தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், பண்டிகை காலம் துவங்கும் போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் விலைப்பிரிவில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் வரவு அதிகரிக்கத் துவங்கும். நாங்களும் எங்களது பண்டிகை விற்பனைக்கு தயாராகி வருகிறோம். பல்வேறு வகையான ஃபோன்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகளும் வழங்கத் திட்டமிட்டுள்¼ளாம் என்றார்.

மேலும், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட உள்ளதால், 5ஜி சாதனங்களுக்கான தேவையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்போம். குறிப்பாக பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தில்! 15-20 ஆயிரம் விலைப்பிரிவில் 2-3 வருடங்கள் நீடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை தொழில்நுட்ப பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கத்துவங்குவர். இருப்பினும் பெரும்பாலான இந்தியர்கள் 10-15 ஆயிரம் விலைப்பிரிவில் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கவே விரும்புவர் என்று தெரிவித்தார்.

ரியல்மி போன்ற பிராண்டுகள் ரூ.10,000 பிரிவின் கீழ் 5ஜி போன்களை விரைவில் வெளியிடுவதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அத்தகைய மலிவு விலை 5ஜி போன்களை சியோமி எப்போது வெளியிடும் என்று கேட்டபோது, அது பொருளாதார அளவைப் பொறுத்தது. இந்தாண்டு இறுதியில் சிப்செட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். எனவே 10 ஆயிரத்திற்குள் 5ஜி ஸ்மோர்ட் போன்களை வெளியிடச் சிறிது காலம் எடுக்கும். தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார்.

Spread the love