October 3, 2022

குறைந்த விலையில் களமிறங்கும்
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன்

புது தில்லி, செப்.10

ரியல்மி நிறுவனம் வரும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தியாவில் புதிய ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:

6.5-இனச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ், 90 யஹர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி உள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் யுனிசோக் டி612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இணையத்தில் கசிந்த தகவலின்படி, இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love