November 29, 2022

குறைந்த விலையில் அறிமுகமாகும் போகோ சி50

மும்பை, நவ.18

நவம்பர் மாத கடைசியில் போகோ சி50 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. போகோ சி40 ஸ்மார்ட்போன் போன்றே சி50 இருக்கும் என கூறப்படும் காரணத்தால போக்கோ சி40 இன் அம்சங்களை பார்க்கலாம்.

போகோ சி40 ஆனது எப்எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய பெரிய 6.71 இன்ச் டிஸ்ப்¼ள பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் ஜேஎல்கியூ ஜேஆர்510 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ சி50 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே போக்கோ சி50 மலிவு விலையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Spread the love